ETV Bharat / state

விரைவில் அறிமுகமாகவுள்ள அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் உள்ள 13 ஆயிரம் கிராமங்களில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார்.

soon-to-be-introduce  amma youth sports program tut
விரைவில் அறிமுகமாகவுள்ள அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் !
author img

By

Published : Jan 28, 2020, 7:17 PM IST

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் 26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாநில அளவில் நடைபெறும் டேக்வாண்டோ, குத்துச்சண்டை, வளையபந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத்தபோதே அமைச்சர் கடம்பூர் செ. ராஜு இதனைத் தெரிவித்தார்.

மேலும் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், “தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறைக்கு இந்த அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது. சர்வதேச அளவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறும் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றிருந்ததை மூன்று கோடியாக வழங்கியது இந்த அரசுதான். அதேபோன்று வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெறுபவர்களுக்கும் ஒரு கோடி, இரண்டு கோடி எனப் பரிசுகளை உயர்த்தி வாரிவழங்கியதால்தான் தமிழ்நாடு இன்று விளையாட்டுத் துறையில் முதலிடத்தில் உள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 403 ஊராட்சிகளிலும் விரைவில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் தொடங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 13 ஆயிரத்து 52 ஊராட்சிகளிலும் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை தொடங்குவதே தமிழ்நாடு அரசின் லட்சியம்; அது விரைவில் நிறைவேற்றப்படும்‌. பாஜகவுடன் - அதிமுக இணக்கமாக உள்ளது. பொன். ராதாகிருஷ்ணனின் சொந்தக் கருத்தை பாஜகவின் கருத்தாக நாங்கள் பார்க்கவில்லை. அஇஅதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் நல்லாட்சி குறித்து மு.க. ஸ்டாலின் பேசியது கண்டனத்திற்குரியது” என்றார்.

முன்னதாக விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : தொகுதி நலனுக்காக முதலமைச்சரை சந்திப்பேன் - திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

Intro:தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் கிராமங்களில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்Body:
தூத்துக்குடி

தமிழகத்தில் உள்ள 13052 கிராமங்களிலும் அம்மா இளைஞர் விளையாட்டு திடல் அமைக்கபடும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் 26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாநில அளவில் நடைபெறும் டேக்வாண்டோ, குத்துச்சண்டை, வளையபந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் விளையாட்டு துறைக்கு இந்த அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. சர்வதேச அளவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெரும் வீரர்களுக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்றிருந்ததை மூன்று கோடியாக வழங்கியது இந்த அரசு, அதே போன்று வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெறுபவர்களுக்கும் 2 கோடி, ஒரு கோடி என பரிசுகளை உயர்த்தி வழங்கியதால் தமிழகம் இன்று விளையாட்டு துறையில் முதலிடத்தில் உள்ளது என்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
தூத்துக்குடி மாவட்டத்தில் 403 ஊராட்சிகளிலும் விரைவில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் 13 ஆயிரத்து 52 ஊராட்சிகளிலும் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை தொடங்குவதே தமிழக அரசின் லட்சியம் அது விரைவில் நிறைவேற்றப்படும்‌
பாஜகவுடன் - அதிமுக இணக்கமாக உள்ளது. பொன் ராதாகிருஷ்ணன் சொந்த கருத்தை பாஜகவின் கருத்தாக நாங்கள் பார்க்கவில்லை. தமிழக அரசுக்கு நல்லாட்சியும் இருந்து வந்தது குறித்து மு க ஸ்டாலின் பேசியது கண்டனத்திற்குரியது என்றார்.

முன்னதாக விளையாட்டு போட்டிகள் தொடக்க நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்துரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.