ETV Bharat / state

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 26 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் பறிமுதல்

தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1.5 டன் மஞ்சளை பறிமுதல் செய்ததோடு, ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைதானோர்
கைதானோர்
author img

By

Published : May 10, 2021, 5:17 PM IST

தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து நாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படவிருப்பதாக கியூ பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில், திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் கியூ பிரிவு காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சரக்கு வாகனத்திலிருந்து நாட்டுப் படகுக்கு ஒரு சிலர் மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். தொடர்ந்து அவர்களை காவல் துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்து நடத்திய விசாரணையில், சுமார் 1.5 டன் மஞ்சளை அவர்கள் சட்ட விரோதமாக தூத்துக்குடியிலிருந்து கடல்வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, கியூ பிரிவு காவல் துறையினர் கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரையும் கைது செய்தனர். மேலும் படகில் இருந்த 1.5 டன் மஞ்சள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு, லோடு வேன் ஆகியவற்றையும் கைப்பற்றினர். இந்த 1.5 டன் மஞ்சளின் மதிப்பு 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.