ETV Bharat / state

கஞ்சா வைத்திருந்தவர் கைது - ஆறு கிலோ கஞ்சா பறிமுதல்! - கஞ்சாவைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி: விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

arrest
arrest
author img

By

Published : May 6, 2021, 10:12 PM IST

தூத்துகுடியில் விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான காவல்துறையினர் தருவைக்குளம் - கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

arrest
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மறித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில், அவர் விளாத்திகுளம் சிப்பிக்குளம், சுனாமி நகரைச் சேர்ந்த அமலன் பச்சேக் (வயது 53) என்பதும், விற்பனைக்காக 6 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அமலன் பச்சேக்கை கைது செய்து அவரிடமிருந்த 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.