தமிழ்நாடு அரசு சார்பில், தூத்துக்குடி மாவட்டம், சிவகளையில் மே 25ஆம் தேதி முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. அந்தப் பணிகள் செப். 30ஆம் தேதியோடு நிறைவடைந்தன.
இதற்கிடையில் அங்கு 4 முதுமக்கள் தாழிகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள், நெல்மணிகள், அரிசி, மனித எலும்புக் கூடுகள், பற்கள் என 500-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நிலையில் அதற்காக தோண்டப்பட்ட 72 குழிகளையும் மூடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜேசிபி வாகனம் மூலம் குழிகள் மூடப்பட்டுவருகின்றன. மேலும் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை ஆவணப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'ஆதிச்சநல்லூரில் 115 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வுப் பணிகள்' - சந்தீப் நந்தூரி தகவல்!