ETV Bharat / state

காதல் திருமணம்: மணமகனின் தாயார் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை - சிவகளை இரட்டைக் கொலை

தூத்துக்குடி: காதல் திருமணம் செய்த விவாகரத்தில் புது மாப்பிள்ளையின் தாயார் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

double-murder-case
double-murder-case
author img

By

Published : Jul 3, 2020, 12:59 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (55). அவரது மகன் விக்னேஷ்ராஜா(21).

இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகள் சங்கீதா (20) என்பவரும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு சங்கீதாவின் அண்ணன் முத்துராமலிங்க ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் விக்னேஷ்ராஜா-சங்கீதா இருவரும் எதிர்ப்பை மீறி 20 நாள்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். அதையடுத்து நேற்று(ஜூலை 2) இரு குடும்பத்தாருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

அதில் வாக்குவாதம் ஏற்பட்டு முத்துராமலிங்க ராஜா அவரது உறவினர் முத்துச்சுடர், நண்பர் அருணாச்சலம் ஆகியோருடன் சேர்ந்து விக்னேஷ்ராஜா அவரது தந்தை லட்சுமணன், விக்னேஷின் நண்பர் அருண்மகேஷ் ஆகியோரை அரிவாளால் சரமாரிய வெட்டினர்.

அதைப்பார்த்த விக்னேஷின் தாயார் முத்துப்பேச்சி தடுக்க முயன்றதில் அவருக்கும் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. அதன்பின்னர் வெட்டிய மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தக் கொலை தாக்குதலில் அருண்மகேஷ், முத்துப்பேச்சி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த விக்னேஷ்ராஜா, தந்தை லட்சுமணன் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் தலைமறைவாக உள்ள முத்துராமலிங்க ராஜா, முத்துச்சுடர், அருணாச்சலம் ஆகிய 3 பேரும் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்துள்ள காவலர்கள், அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். காதல் திருமண விவகாரத்தில் மணமகனின் தாயார் உள்பட இருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இரட்டைக்கொலை வழக்கு: 10 பேருக்கு ஆயுள் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.