தூத்துக்குடி: உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு, திரு.வி.க. நகர் பகுதியில் மரம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரம் நடுவது அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி மரக்கன்று நட்டனர்.
அதைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கரோனாவிற்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சித்த மருத்துவ மருந்துப் பெட்டக விற்பனையை கனிமொழி தொடங்கிவைத்தார்.
ரூபாய் 50 என விலை நிர்ணயம்செய்யப்பட்டுள்ள மருந்துப் பெட்டியினுள் கபசுரக்குடிநீர் பொடி, ஆடாதோடா மருந்து, சூரண வில்லைகள் வைக்கப்பட்டுள்ளன. இதை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அவர் இலவசமாக வழங்கினார்.
இதையும் படிங்க: '12 ஆண்டுகளுக்குப் பிறகு பாய்ந்தது வைகை; இது திமுகவின் சாதனை!'