ETV Bharat / state

இலங்கைக்கு கடல் அட்டைகளைக் கடத்திய 4 பேர் கைது! - sea cucumber smuggling four persons arrested in srilanka

தூத்துக்குடி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

cucumber
cucumber
author img

By

Published : May 20, 2020, 3:25 PM IST

தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக அரியவகை கடல் அட்டைகளைக் கடத்திய நான்கு பேர் இலங்கை கடற்கரையில் இறங்கும்போது, மறைந்திருந்த இலங்கை - கல்பிட்டி நகரைச் சேர்ந்த காவல் துறையினர் கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து, கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்த 763 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் கல்பிட்டி காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், தூத்துக்குடியிலிருந்து கொழும்பு வழியாக வளைகுடா நாட்டிற்கு கடல் அட்டைகளைக் கொண்டுசெல்ல நால்வரும் திட்டமிட்டிருந்ததாகத் தெரிய வந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என இலங்கை கடற்படை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கடல் அட்டை சேகரிப்பு: மூச்சுத் திணறி உயிரிழந்த மீனவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.