ETV Bharat / state

100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி பெற்றோருக்கு தபால் கார்டுகள் அனுப்பிய மாணவர்கள்

author img

By

Published : Mar 13, 2021, 11:26 AM IST

தூத்துக்குடி: தபால் கார்டுகள் அனுப்பி பெற்றோருக்கு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

election
election

தூத்துக்குடி மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் அவர்களுடைய பெற்றோர், உறவினர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குறித்து தபால் கார்டுகளை எழுதி அனுப்பும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் எழுதிய தபால் கார்டுகளை தபால் துறை அலுவலரிடம் ஒப்படைத்தார்.

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 9,10,11,12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஒரு லட்சம் பேர், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக தங்களுடைய பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில் பெரும்பாலும் "தேர்தலில் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது" என்பதை வலியுறுத்தி மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தக் கடித அட்டைகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஐந்து முதல் ஆறு லட்சம் வாக்காளர்களை சென்று சேரும். எனவே, பள்ளிக்குழந்தைகள் மூலம் பெரியோர்களிடம் நேர்மையான தேர்தலுக்கு நேரடியாக வழிகாட்ட முடியும். இது நிச்சயம் வாக்காளர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் சூழலில், திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ’கரோனா விதிமுறைகளுடன் வேட்பு மனு தாக்கல் நடைபெறும்’ - ஆட்சியர் செந்தில் ராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.