ETV Bharat / state

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய திமுக பிரமுகர் கைது! - school girl raped by dmk person get arrested by police at Tuticorin

தூத்துக்குடி: முடிவைத்தானேந்தல் பகுதியில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய குற்றத்தில் திமுக கலை இலக்கிய அணி துணை அமைப்பாளரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

Tuticorin
திமுக பிரமுகர் கைது
author img

By

Published : Dec 18, 2019, 7:52 AM IST

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த ராஜ் (50), டி.வி.மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். மேலும், தூத்துக்குடி மாவட்ட திமுக கலை இலக்கிய அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். இவர், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்தும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றியும் பலமுறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும், அச்சிறுமி தான் கர்ப்பம் அடைந்திருப்பது தெரியாமல், தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்ட காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பம் தரித்திருக்கும் தகவலை பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் குழந்தையின் எதிர்காலம் இப்படி சீரழிந்துவிட்டதே என நினைத்து கதறி அழுதனர்.

மேலும், சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்த சிறுமிக்கு கர்ப்பம் கலைவதற்கான மருந்தை பெற்றோர் கொடுத்துள்ளனர். இதனால், ஆறு மாதமான குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. பின்னர் யாருக்கும் தெரியாமல் இறந்த குழந்தையை வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய திமுக பிரமுகர் கைது!

இத்தகவலறிந்து சிறுமியின் வீட்டிற்கு விரைந்த தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் துறை, தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுமியை திமுக பிரமுகர் பாலியல் வண்புணர்வு செய்து கர்ப்பமாக்கியது மட்டுமல்லாமல் வெளியே யாரிடமும் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் எனக் கூறி மிரட்டியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, திமுக பிரமுகர் ராஜை புதுக்கோட்டை காவல்துறை "போக்சோ" சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையும் படிங்க: மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சென்னை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை!

Intro:தூத்துக்குடி அருகே 16-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய திமுக பிரமுகர் கைது
Body:தூத்துக்குடி அருகே 16-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய திமுக பிரமுகர் கைது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 50). டி.வி.மெக்கானிக்காக வேலைசெய்து வரும் இவர் தூத்துக்குடி மாவட்ட திமுக கலை இலக்கிய அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார்.
இவர், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவருக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி அவருடன் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதன் விளைவாக அந்த சிறுமி கர்ப்பம் தரித்தார். தான் கர்ப்பம் அடைந்தது கூட தெரியாமல் அந்த சிறுமி தொடர்ந்து பள்ளி சென்றுவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து சிகிச்சைக்காக சிறுமியை அவளது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது குழந்தையின் எதிர்காலம் இப்படி சீரழிந்துவிட்டதே என நினைத்து கதறி அழுதனர்.

இதைத் தொடர்ந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த அவளது பெற்றோர்கள், கர்ப்பம் கலைவதற்கு மருந்து கொடுத்ததில் சிறுமிக்கு, 6 மாத குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இறந்த நிலையில் பிறந்த குழந்தையை வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டப் பகுதியில் சிறுமியின் வீட்டார் குழி தோண்டி புதைத்துள்ளனர். இதுகுறித்த தகவல் தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் புதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் சிறுமியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை திமுக பிரமுகர் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதும், இதை வெளியே யாரிடமும் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என கூறி மிரட்டியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திமுக பிரமுகர் ராஜை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் "போக்சோ" சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் குழந்தை இறப்பின் மீது சந்தேகத்திற்கிடமான சாவு என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.