ஜெயராஜ், ஃபென்னிக்ஸ் கொலை வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ், சாமதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து உள்ளிட்ட 10 பேர் சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் பால்துரை, தாமஸ் பிரான்சிஸை தவிர மற்ற அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பால்துரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோருக்கு மருத்துவப் பரிசோதனையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், இருவருக்கும் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து, அவர்கள் தூத்துக்குடி முதன்மைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து நிர்வாகம், பாதுகாப்பு காரணங்களுக்காக பேரூரணி சிறையில் அடைக்கப்பட்ட பால்துரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய இருவரையும் பலத்த காவல் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் காவலர்களை அழைத்துவந்த வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!