ETV Bharat / state

சாத்தான்குளம் வழக்கு: நள்ளிரவு வரை தொடர்ந்த சிபிஐ விசாரணை - cbi enquiry at sathankulam

தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் உள்பட 5 பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து சிபிஐ அலுவலர்கள் நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்டனர்.

cbi
cbi
author img

By

Published : Jul 16, 2020, 8:13 AM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கு தொடர்பாக ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ், பால் துரை, சாமதுரை, செல்லதுரை, தாமஸ், பிரான்சிஸ், வெயிலு முத்து உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் காவலர் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனையடுத்து சிபிஐ அலுவலகத்தில் ஐந்து பேரிடமும் விசாரணை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக நேற்று (ஜூலை 15) தனி வாகனத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டது குறித்தும், அன்றைய தினம் நடந்தவை குறித்தும் செயல்விளக்க முறையில் சிபிஐ அலுவலர்கள் நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர தலைமை காவலர் ரேவதியும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவரிடமும் சாட்சியம் பெறப்பட்டது.

இதையும் படிங்க: ராம ஜென்ம பூமியை மீண்டும் அகழாய்வு செய்ய யுனெஸ்கோவை நாடும் புத்தத் துறவிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.