ETV Bharat / state

'கரோனாவுடன் மேலும் 6 மாத காலம் நாம் போராட வேண்டியிருக்கும்' - ஆட்சியர்

தூத்துக்குடி: கரோனாவுடன் மேலும் 6 மாத காலம் போராட வேண்டியிருக்கும் என்பதால் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author img

By

Published : May 7, 2020, 12:49 PM IST

தூத்துக்குடி மாவட்டச் செய்திகள்  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயலாளர் பொன்சேகர்  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ரத்ததான முகாம்  thoothukudi news  thoothudi district collector  sandeep nandhuri
கரோனாவுடன் மேலும் 6 மாதகாலம் நாம் போராட வேண்டியதிருக்கும்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 37ஆவது ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு, அந்த அமைப்பின் செயலாளர் பொன்சேகர் ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்த இந்த முகாமில் 50 பேர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

நிகழ்வில் பேசிய ஆட்சியர், "தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து கரோனா நோயாளி இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டச் செய்திகள்  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயலாளர் பொன்சேகர்  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ரத்ததான முகாம்  thoothukudi news  thoothudi district collector  sandeep nandhuri
ரத்த தானம் அளிக்கும் அரசு ஊழியர் சங்க உறுப்பினர்

மேலும், ஆறு மாத காலத்திற்கு நாம் கரோனா வைரஸ் தொற்றுடன் போராட வேண்டிய நிலை இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் அரசு எடுக்கும் முயற்சிக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வெளி மாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்து முறையான அனுமதி பெற்று வருபவர்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தவறுதலாக வரும் நபர்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மருத்துவ அவசர காலத்திற்கு ரத்தம் அவசியமானது. அறுவைச் சிகிச்சைகள், மருத்துவத் தேவைக்குப் போதுமான அளவு ரத்தம் இருப்பு இருக்க வேண்டும் என்பதால் இம்மாதிரியான ரத்த தான முகாம்கள் அவசியமானதாகும். கரோனா பாதிப்புள்ள இந்த நேரத்தில் ரத்த தான முகாம் நடத்துவது நல்ல முயற்சி" என்றார்.

இதையும் படிங்க: டிக் டாக் இளைஞர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுத்த வனத்துறையினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.