ETV Bharat / state

சேலம் எட்டு வழிச்சாலை தமிழ்நாட்டிற்கு அவசியம் தேவை - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: சேலம் எட்டுவழிச்சாலை பயன்பாட்டுக்கு வரும்போது அதன் அருமை புரியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

kadampur raju
kadampur raju
author img

By

Published : Jun 5, 2020, 9:56 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான 2 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் வித்யா பிரகாசம் மனவளர்ச்சி குன்றிய மாணவ, மாணவியர்களுக்கு 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து அரசு மருத்துவமனையில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் அவசர சிகிச்சை பிரிவுக்கான கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை மற்றும் இபி காலனியில் 17 கோடியே 26 லட்சம் ரூபாய் திட்டத்தில் அமையவுள்ள தார் சாலை பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஜிஎஸ்டி என்பது மத்திய அரசின் வரி. வரி குறைப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். இதற்கு முன்னர் 28 விழுக்காடாக இருந்த ஜிஎஸ்டி வரியை தமிழ்நாடு அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து 100 ரூபாய்க்கு குறைவாக விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு 14 விழுக்காடும் 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் டிக்கெட்டிற்கு 28 விழுக்காடும் ஜிஎஸ்டி வரியை பெற்றுத் தந்தது.

அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

கேளிக்கை வரி முன்பு 30 விழுக்காடாக இருந்தது. பின்னர் குறைக்கப்பட்டு தற்போது 8 விழுக்காடாக உள்ளது. தற்போதுள்ள பொருளாதார நிலைமையை பொறுத்து கேளிக்கை வரி குறைப்பது குறித்து கரோனா தடை முடிவடைந்த பின்னர் முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். சேலம் எட்டு வழிச் சாலை அத்தியாவசியமான ஒன்று, எட்டு வழி சாலை வரும் போது தமிழ்நாடு வளர்ச்சிப் பாதை நோக்கி செல்லும். இந்த சாலை வந்த பிறகுதான் அதனுடைய அருமை தெரியும்" என்றார்.

இதையும் படிங்க: யானை மரணம்: வீண்பழி சுமத்துவதாக மேனகா காந்தி மீது புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.