ETV Bharat / state

கலாசாரத்தை மீட்டெடுக்க எழுச்சியுடன் செயல்படும் பாஜக - ஆர்.கே. சுரேஷ்

தூத்துக்குடி: கலாசாரத்தை மீட்டெடுப்பதில் பாஜக எழுச்சியோடு செயல்படுகிறது என பாஜக ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கலாச்சாரத்தை மீட்டெடுக்க எழுச்சியுடன் செயல்படும் பாஜக -ஆர்.கே. சுரேஷ்

author img

By

Published : Jan 13, 2021, 9:34 AM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் "நம்ம ஊர் பொங்கல் விழா" பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் போஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொங்கலிட்டார். அதில், தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, 308 பானைகளில் பொங்கலிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.சுரேஷ், 'பாஜகவுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி உள்ளது. கலாசாரத்தை மீட்டெடுப்பதில் பாஜக எழுச்சியோடு செயல்படுகிறது. தாமரை மலராது எனக் கூறியவர்கள், தற்போது தாமரை மலர்வதை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி தொடர்கிறது. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை எங்கள் தலைமை முடிவு செய்யும். அதிமுக தமிழ்நாட்டில் பெரிய கட்சியாக இருக்கலாம். ஆனால், உலகத்தில் பெரிய கட்சியாக பாஜக உள்ளது' என்றார்.

இதையும் படிங்க...கல்வி கற்க தினமும் 24 கி.மீ., பயணம்... விளிம்பு நிலை வாழ்க்கையிலிருந்து விளம்பரத் தூதரான பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.