தூத்துக்குடி: கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். கார் மெக்கானிக்காகப் பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி சுபா (28). கர்ப்பிணியான இவர் கடந்த 25ஆம் தேதி பிரசவத்துக்காக, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பின்னர் நேற்று முன்தினம் (ஜூன் 28) காலை 11 மணி அளவில் அறுவை சிகிச்சை மூலம் சுபாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென வலிப்பு ஏற்பட்டு சுபா உயிரிழந்தார்.
மருத்துவர்களின் கவனக்குறைவாலும், அலட்சியப்போக்காலும்தான் சுபா உயிரிழந்ததாக, அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர்கள் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து, சுபாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்துக்கு அனுமதி!