தூத்துக்குடி: தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய உணவுக் கழகத்தின் குடோன் அமைந்துள்ளது. இங்கு, தமிழகத்தில் உள்ள தென் மாவட்ட நியாய விலைக் கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பக்கூடிய ரேசன் அரிசி, கோதுமை ஆகியவை ஆயிரக்கணக்கான டன்களில் 10க்கும் மேற்பட்ட குடோன்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகரில் கடந்த டிச.17, 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை மற்றும் குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, இந்திய உணவுக் கழகத்தின் உள்ளே வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக, இந்திய உணவுக் கழக குடோன்களில் வைக்கப்பட்டிருந்த அரிசி மற்றும் கோதுமை மூடைகள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
இதில், ரூ.15 கோடி மதிப்பிலான 6 ஆயிரம் டன் அரிசி மற்றும் 500 டன் கோதுமை ஆகியவை சேதமடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, ரேசன் கடைகளுக்கு அரிசி மற்றும் கோதுமை அனுப்புவது பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “20 லட்சம் ரூபாய் செலவில் குளோரின் மாத்திரை… தூத்துக்குடியில் நோய் தொற்றை தடுக்க முன்னெச்சரிக்கை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!