ETV Bharat / state

மோடி-அமித் ஷா குறித்த ரஜினியின் கருத்து ஆச்சரியம் இல்லை - திருமாவளவன்

author img

By

Published : Aug 11, 2019, 7:13 PM IST

தூத்துக்குடி: மோடி-அமித் ஷாவை, கிருஷ்ணன், அர்ஜுனன் என்று ரஜினி தெரிவித்த கருத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தொல். திருமாவளவன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடும் பதற்றம் நிலவிவருகிறது, பொது மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அங்கு நடைபெறும் விஷயங்களை வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஊடகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு உரிமைகளையும், அதிகாரங்களையும் மோடி அரசு ரத்து செய்து, வரலாற்று துரோகம் நிகழ்த்தியுள்ளது. இதனை விசிக வன்மையாக கண்டிக்கிறது.

திமுக கூட்டணி கட்சிகள் ஒன்றுக்கூடி மத்திய அரசின் இந்த சதிகாரப் போக்கை கண்டித்துள்ளன. நாடாளுமன்றத்தின் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு காஷ்மீர் மாநிலத்திற்கு செல்ல மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம். இதற்காக இந்திய அளவில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய உள்ளோம். நாட்டின் நெருக்கடியான இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டது சரியான முடிவு.

அதுபோல் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் நடிகர் ரஜினியிடமிருந்து எதிர்ப்பார்க்க முடியாது. அவர் பாஜகவிற்கு ஆதரவான கருத்துக்களை கூறுவதுண்டு, ஆகவே அவர் மோடி-அமித் ஷாவை மகாபாரதத்திலிருந்து கிருஷ்ணன், அர்ஜுனன் என்று உவமையாக சொல்லப்பட்ட கருத்தில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை" என்றார்.

Intro:ரஜினியிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் வரும் என எதிர்ப்பார்க்க முடியாது - வி.சி.க. கட்சித்தலைவர் திருமாவளவன் எம்பி பேட்டி
Body:

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி இன்று மாலை விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது. பொது மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்திருக்கிறது. அங்கு நடைபெறும் விஷயங்களை வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஊடகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களுக்கு, மோடி அரசு வரலாற்று துரோகத்தை செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு உரிமைகளையும், அதிகாரங்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது ஒரு மாபெரும் வரலாற்றுத் துரோகமாகும். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக திராவிட முன்னேற்றக் கூட்டணி கட்சிகள் ஒன்றுகூடி மத்திய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கை கண்டித்துள்ளது. நாடாளுமன்ற அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு செல்ல மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறோம். இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மீண்டும் கூடி கலந்தாய்வு செய்வோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் தகர்க்க கூடிய வகையில் மோடி அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனுடைய உச்ச நிலையாக தான் ஜம்மு-காஷ்மீர் உரிமைகளை ரத்து செய்ததாக பார்க்கப்படுகிறது. இதை கண்டித்து இந்திய அளவில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய உள்ளோம். நெருக்கடியான நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டது சரியான முடிவு. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

வேலூர் தொகுதியில் திமுக அனைத்து பராக்கிரமங்களையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது. தோல்விக்குப் பிறகு தொண்டர்களை தக்க வைத்து கொள்வதற்காக அதிமுக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதுபோல் ரஜினியிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் வரும் என எதிர்ப்பார்க்க முடியாது. அவர் மத்திய அரசுக்கு ஆதரவான கருத்துக்களை கூறுவதுண்டு. ஆகவே மகாபாரதத்திலிருந்து மோடி - அமித் ஷாவுக்கு உவமையாக சொல்லப்பட்ட கருத்தில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. இது அதிர்ச்சி அடையக் கூடியதும் இல்லை என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.