மதுரை: வளிமண்டல சுழற்சி காரணமாக, கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நெல்லை சந்திப்பு உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் வெள்ள நீரால் சூழ்ந்தது. இதனையடுத்து, மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றது.
அதேநேரம், தூத்துக்குடியில் கொட்டித் தீர்த்த மழையால், திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து, முதலில் 300 பேர் அதிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீதமுள்ள 500 பேரும் மீட்கப்பட்டு, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் எழும்பூர் ரயில் நிலையம் சென்றடைந்தனர்.
இதனிடையே, மழை வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் பகுதி பெரும்பாலும் பாதிப்படைந்தது. அங்கு, மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய விமானப்படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
-
Restoration work is going on in full swing in #Tiruchendur and #Tuticorin areas of #Madurai Division following the recent unprecedented rains, passengers are requested to take note on this and plan your #travel #SouthernRailway #TirunelveliFloods #southtnrains pic.twitter.com/UwDF2MIxlp
— Southern Railway (@GMSRailway) December 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Restoration work is going on in full swing in #Tiruchendur and #Tuticorin areas of #Madurai Division following the recent unprecedented rains, passengers are requested to take note on this and plan your #travel #SouthernRailway #TirunelveliFloods #southtnrains pic.twitter.com/UwDF2MIxlp
— Southern Railway (@GMSRailway) December 20, 2023Restoration work is going on in full swing in #Tiruchendur and #Tuticorin areas of #Madurai Division following the recent unprecedented rains, passengers are requested to take note on this and plan your #travel #SouthernRailway #TirunelveliFloods #southtnrains pic.twitter.com/UwDF2MIxlp
— Southern Railway (@GMSRailway) December 20, 2023
அதேபோல், அதிகமான மழை நீர் புகுந்ததால் தூத்துக்குடி மிளவிட்டான் அருகே ரயில் பாதையில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது வெள்ள நீர் வெளியேறியதால், அந்தப் பகுதியில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு, போக்குவரத்திற்கு தகுதியாக இருக்கிறது என சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, நேற்று (டிச.20) மைசூரில் இருந்து புறப்பட்ட தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிக்கான வசதிகள் இன்னும் தயாராகவில்லை என்பதால், நேற்று இரவு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட சென்னை - தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் மதுரை வரை மட்டுமே இயக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று இரவு சென்னை எழும்பூரில் இருந்து 7.30 மணிக்கு புறப்பட்ட முத்துநகர் விரைவு வண்டி, இன்று அதிகாலை 3.15 மணியளவில் மதுரை ரயில் நிலையம் வந்தடைந்துள்ளது. மேலும், ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிக்கான வசதிகள் முழுமையடைந்ததும், வழக்கம்போல் ரயில் போக்குவரத்து சேவை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 150 ஏக்கர் நெற்பயிர்களை சுருட்டிச் சென்ற வெள்ளம்...நிர்கதியாக நிற்கும் நெல்லை விவசாயிகள்!