ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் எதிர்ப்பு!

தூத்துக்குடி: மக்களால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை, மக்களிடம் கருத்து கேட்டபின்தான் திறக்க வேண்டும் என மக்கள் இயக்க நிர்வாகிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

sterlite
ஸ்டெர்லைட்
author img

By

Published : Apr 27, 2021, 7:12 AM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக நான்கு மாதங்கள் மட்டும் திறக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, தூத்துக்குடி மத்திய வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வினாயகமூர்த்தி, பண்டாரம்பட்டி கிராம மக்கள் ஒருங்கிணைப்பாளர் வசந்தி, வழக்குரைஞர்கள் ஹரி இராகவன், அதிசய குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தூத்துக்குடியில் காற்றையும் நிலத்தையும் மாசுபடுத்திய ஸ்டெர்லைட் ஆலையை 15 உயிர்கள் பலியானதைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தால் இழுத்து மூடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் என்பது எவ்வித அரசியல் கட்சிகளாலும் நடைபெறவில்லை. தன்னெழுச்சியாக மக்களாக முன்வந்து போராட்டம் நடத்தி ஆலையை மூடி உள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் எதிர்ப்பு

எனவே, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி தரலாம் என்பது குறித்த ஆலோசனைக்கு அரசியல் கட்சிகளின் கருத்துகள் மட்டுமே போதும் என நினைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

ஆலைக்கு அனுமதி வழங்குவது குறித்து மக்களுடைய கருத்துகளைக் கேட்பதுதான் சரியானது. தூத்துக்குடி மக்களைப் பொறுத்தவரையில் ஸ்டெர்லைட் ஆலையை எந்தக் காரணம் கொண்டும் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்பதுதான் கருத்து. அதிலிருக்கும் தாமிர உற்பத்தி அலகுகள் முற்றிலுமாகப் பிரித்து அழிக்கப்பட வேண்டும்.

நாங்கள் ஆக்சிஜன் உற்பத்திக்கு எதிரானவர்கள் என்பது அர்த்தமாகாது. ஏனெனில் உயிர்களின் மதிப்பு என்ன என்பது தூத்துக்குடி மக்கள் நன்கு அறிவார்கள். எனவே ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்குத் தூத்துக்குடியில் உள்ள மற்ற தொழிற்சாலைகளில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து அரசு எடுத்துக் கொள்ளலாம்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைக் கொண்டு நீதிமன்றம் என்ன தீர்ப்பு தருகிறதோ அதன் பிறகு இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து இயக்கத்தின் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் இருக்கும்" என்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.