பரிதாப குணம் மனிதரிடத்தில் அதிகம் இருக்கிறது. இந்தியர்கள் பிராணிகளை அதிகம் நேசிக்கும் குணம் கொண்டவர்கள். அதனால்தான் நாம் மனிதனாக இருக்கிறோம். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கிற்கு அப்பகுதி மக்கள் செய்த காரியம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
தூத்துக்குடி இரண்டாம் கேட் பகுதியில் சுற்றித் திரிந்த குரங்கு ஒன்று அங்குள்ள மின் கம்பத்தில் தாவும்போது மின்சாரம் தாக்கி இறந்தது. வெகு நாட்களாக அங்கே சுற்றித்திரிந்த குரங்கு மின்சாரம் தாக்கி இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இறந்துகிடந்த குரங்கை மீட்ட அப்பகுதி மக்கள் அதற்கு மஞ்சள் தடவியும் , பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, மனிதர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்வோமோ அதேபோன்று உரிய மரியாதையுடன் இறந்த குரங்கை அடக்கம் செய்தனர்.