ETV Bharat / state

தூத்துக்குடியில் இல்லாத பூங்காவிற்கு பூட்டு போட்ட அதிகாரிகள்..

தூத்துக்குடி அருகே பராமரிப்பு இன்றி பாழடைந்துள்ள சிறுவர் பூங்காவினை, சீர் செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பூங்காவை சீர்மைக்க பொதுமக்கள் கோரிக்கை
பூங்காவை சீர்மைக்க பொதுமக்கள் கோரிக்கை
author img

By

Published : Feb 1, 2023, 11:43 AM IST

பூங்காவை சீர்மைக்க பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி: சிறுவர்கள், முதியவர்கள் பொழுது போக்க, காலை மாலை நடைப்பயிற்சி போன்றவற்றிற்காக நகரபகுதியில் ஆங்காங்கே பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. இதில், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் இடம் பெற்றிருக்கும். முதியவர்கள், பெண்கள் நடமாட வசதியாக சிமெண்ட் ரோடு, பூக்கள் பதித்த நடைப்பயிற்சி தளம் அமைக்கபட்டு, பயன்பாடு அதிகம் இருந்தும் சில இடங்களில் முறையாக பராமரிப்பின்றி பூங்காக்கள் புதர் மண்டி கிடக்கின்றன.

அந்த வகையில், தூத்துக்குடி மாநகரில் உள்ள டுவிபுரம் 9வது தெருவில் சிறுவர் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவானது பல வருடங்களாக புதர் மண்டி, சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது, என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாட சறுக்கு, நடைப்பயிற்சி மேற்கொள்ள சிமெண்ட் தரை தளம் போடப்பட்டுள்ளது. ஆனால், பூங்கா பராமரிப்பின்றி அவை அனைத்தும் பாழடைந்து காட்சியளிக்கிறது.

இந்த பூங்காவை சுற்றி, சுற்று சுவர் இல்லாமல் வெட்ட வெளிச்சமாக திறந்த வெளி பூங்காவாக உள்ள நிலையில், இதற்கென ஒரு கேட் போடப்பட்டு அதற்கு ஒரு பூட்டும் போடப்பட்டுள்ளது. அருகில் மாவட்ட மைய நூலகம், மருத்துவமனை, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் வீடுகள் உள்ளன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இங்கு புதர்கள் மண்டி கிடப்பதினால் அருகில் உள்ள வீடுகளில் விஷ பூச்சிகள் உள்ளே நுழைகிறது. இது குறித்து சுற்றியுள்ள மக்கள் அருகில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தும் பயனில்லை. எனவே இப்பூங்காவை சீர் செய்து சிறுவர்கள் விளையாட, பெரியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஒரு பொழுது போக்கு பூங்காவாக மாற்றி தர வேண்டும்” என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: Viral Video: பிரபல ஹோட்டலில் இருந்த சிக்கனை ருசித்த நாய்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.