ETV Bharat / state

‘மக்கள் விரோத மத்திய அரசு’ - தூத்துக்குடியில் ஓங்கி ஒலித்த மக்கள் குரல் - தூத்துக்குடியில் மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

citu protest
citu protest
author img

By

Published : Mar 3, 2020, 9:36 AM IST

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை, தொழிலாளர் விரோதப் போக்கு, பொதுத்துறை தனியார் மயமாக்குதல் உள்ளிட்டவற்றைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு உள்பட அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ரசல் என்பவர் பேசுகையில், “மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்.

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம்

இதனால், பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும். நாடு முழுவதும் தொழிலாளர் நலச்சட்டங்களை முதலாளிகளுக்கு சாதகமாக இருக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்கிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: ’மக்களின் அச்சத்தைப் போக்க ரஜினி என்ன பிரதமரா?’ - சுப. உதயகுமார்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.