தூத்துக்குடியில், புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், இன்று ரயில் முன்பதிவு மாதிரி தத்ரூபமாக மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
அதாவது, மாணவர்கள் ரயில் நிலையத்திற்குச் சென்று எவ்வாறு டிக்கெட் எடுப்பது, எவ்வாறு முன்பதிவு செய்ய வேண்டும், பயண எண், புறப்படும் நேரம், சேரும் நேரம் போன்ற அமைப்புகள் விளக்கப்பட்டிருந்தன. இதனை மாணவர்கள் ஆர்வமாக பார்த்து விழிப்புணர்வு அடைந்தனர்.
இதுகுறித்து பள்ளி மாணவர் முகம்மது இர்பான் கூறுகையில், ''மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு போன்ற அடிப்படை தெரியாமல் உள்ளது. ஆகவே, ரயில் நிலைய முன் மாதிரி தயார் செய்து ரயில் நிலைய மாஸ்டர், டிடிஆர் ஆகியோர் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது'' என்றார்.
தொடர்ந்து ஆசிரியர் பெனிட்டன் கூறுகையில், ''ரயில் முன் மாதிரி அமைக்கப்பட்டது, இப்பள்ளியில் இதுவே முதல் முறையாகும். மாணவர்களுக்கு ரயில் எண், முன் பதிவு செய்யும் படிவம், அளிக்கப்பட்டு அதனை பூர்த்தி செய்ய சொல்லி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வால், மாணவர்கள் ரயில் நிலையம் சென்று பதற்றம் இல்லாமல் அனைத்தையும் தெரிந்து கொண்டு மேலும், பல மாணவர்களுக்கு ஊக்குவிப்பார்கள். ரயில் நிலையம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்'' என்றார்.
இதையும் படிங்க: பூம்புகார் அரசு கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ்!