ETV Bharat / state

தூத்துக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க முன்னேற்பாடுகள்: ஆட்சியர் தகவல் - குடிநீர் தட்டுப்பாடு

தூத்துக்குடி: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

குடிநீர் தட்டுப்பாடு
author img

By

Published : May 28, 2019, 7:39 AM IST

தேர்தலுக்குப் பின்பு அரசு அலுவலகங்கள் மே 27ஆம் தேதி இயல்பு நிலைக்குத் திரும்பின. இதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மூன்று மாவட்டத்திற்கும் மணிமுத்தாறு, சேர்வலாறு, பாபநாசம் ஆகிய அணைகள் முக்கிய நீர் ஆதாரமாக இருந்துவருகின்றன எனத் தெரிவித்தார்.

இம்மாவட்டங்களின் தினசரி தண்ணீர் உபயோகத்திற்கு 300 கியூபிக் அளவுக்கு தண்ணீர் தேவைப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், தற்போது அணைகளில் உள்ள நீர் இருப்பு வருகிற ஜூன் 30ஆம் தேதி வரை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யும் அளவுக்கு போதுமானதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

குடிநீர் பிரச்னை ஏற்படாமலிருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்த அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் பாலிதீன் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது என்றார்.

தூத்துக்குடி மாவட்ட அரசு அலுவலர்கள் தேர்தல் பணிகளில் இருந்ததால் மீண்டும் பொதுமக்கள் பாலிதீனைப் பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. இன்று முதல் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு பாலீதீன் உபயோகத்தை தடைசெய்யும் விதமாக தீவிர சோதனைகளில் ஈடுபடுவார்கள் எனக் கூறினார்.

தற்போது கிராம பஞ்சாயத்து, ஊராட்சிப் பகுதிகளில் பாலீதீன் பயன்படுத்துவோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுவருகிறது என்றார்.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

இந்திய முழுவதும் பல கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன. இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக திரும்ப பெற்றுக்கொள்ள படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து இன்று முதல் அரசு அதிகாரிகள் வழக்கம் போல் தங்களது பணிக்கு திரும்ப தொடங்கினர். மேலும் அரசு சார்ந்த விழாக்கள், நிகழ்ச்சிகள், பொது மக்கள் குறைகேட்பு முகாம் ஆகியவை நடைபெற்றன. இந்நிலையில் தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது

திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகள் என இந்த மூன்று மாவட்டத்திற்கும் மணிமுத்தாறு, சேர்வலாறு பாபநாசம் ஆகிய அணைகள்தான் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகின்றது. திருநெல்வேலி தூத்துக்குடி விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆகியவற்றிற்கு தினசரி  தண்ணீர் உபயோகத்திற்கு 300 கியூசிக்ஸ் அளவுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.  தற்போது அணைகளில் நீர் இருப்பானது வருகிற ஜூன் 30ம் தேதி வரை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு போதுமான அளவுக்கு உள்ளது. ஜூன் மாதத்தில் பருவமழை காலம் தொடங்கி விடும் என்ற நம்பிக்கை இருப்பதால் பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு குடிநீர் பிரச்சனை ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது குடிநீர் குழாயில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் லாரிகளின் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 20 எம்.ஜி.டி. அளவுக்கு தண்ணீர் தேவை இருக்கின்ற நிலையில் குடிநீருக்காக நாம் தினமும் 7 எம்.ஜி‌.டி. அளவுக்கான தண்ணீரை மட்டுமே நாம் குடிநீருக்காக பயன்படுத்தி வருகிறோம். தொழிற்சாலைகளுக்கும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் தான் வழங்கப்பட்டு வருகிறது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் மூன்றாம் தேதி திறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதற்கான முறையான அறிவிப்பு இன்னும்  வரவில்லை. ஆனாலும் பள்ளிகளை குறித்த காலகட்டத்திற்குள் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலிதீன் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பணிகளில் அதிகாரிகள் இருந்ததால் மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் பாலிதீன் பயன்பாடு உள்ளதாக தெரியவந்துள்ளது. இன்று முதல் நகராட்சிகள், மாநகராட்சி பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பாலீதின் உபயோகத்தை தடை செய்யும் விதமாக தீவிர சோதனைகளில் ஈடுபடுவார்கள். தற்போது கிராம பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி பகுதிகளில் பாலீதின் பயன்படுத்துவோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.