வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார், சிப்பிகுளம் உள்ளிட்டவை தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மீனவ கிராமங்கள். இப்பகுதியிலுள்ள மீனவர்கள் தங்களுக்கு சொந்தமான 600க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் 57 விசைப்படகுகளை புயலில் இருந்து சேதமடையா வண்ணம் பாதுகாக்க முயன்று வருகின்றனர்.
மேலும் விசைப்படகுகள் வழக்கமாக ஒரு நங்கூரத்தின் மூலம் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் புரெவி புயல் எச்சரிக்கை நடவடிக்கையால் கூடுதல் நங்கூரங்களின் மூலம் விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்படி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி - 30 ஆண்டுகளுக்கு பின் நீரில் மூழ்கிய நந்தி சிலை