பிரதமர் மோடியின் 70ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் தூத்துக்குடி-மதுரை புறவழிச்சாலையில் 70 அடி கொடிக்கம்பத்தில் பாஜக கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதில், கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "நீட் தேர்வு விவகாரத்தில் அச்சத்தின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்வது வருத்தம் அளிக்கக்கூடிய செயல். ஆனால், மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதுகுறித்த அச்சத்தை நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் சடலங்களை வைத்து அரசியல் செய்கின்றனர். திமுகவின் பேச்சை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம். மு.க. ஸ்டாலின் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவருகிறார். தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யப்போகிறோம் என மு.க. ஸ்டாலின் கூறுவது வேடிக்கையானது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் முதல்வரை சந்திக்க முடிவு