திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தனியார் காவலாளியாகப் பணிபுரிந்துவருபவர் கீழப்பள்ளிபத்து கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாள். இவரை கோயில் பூசாரியாகப் பணியாற்றிவரும் ஜெயமாலினிக்குமார் தாக்கியதாக திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான காவல் துறையினர் விசாரணையில், இன்று வழக்கம்போல் இளையபெருமாள் காவலர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குவந்த ஜெயமாலினிக்குமார் கோயிலின் பிரதான வாயிலின் சாவியை கேட்டுள்ளார். அதற்கு கோயில் உள்துறை அலுவலர் அனுமதியளித்த பின்னர் சாவியை தருவதாக இளையபெருமாள் கூறியுள்ளார்.
இதற்கு கோயிலுக்குள் தாங்கள் வைத்ததுதான் சட்டம், சாவியை தரவில்லை என்றால் வேலையை விட்டு காலி செய்துவிடுவேன் என ஜெயமாலினிக்குமார் அவரை மிரட்டியதுடன் தாக்கியதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் ஜெயமாலினிக்குமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்ய வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கட்டுபாடுகளுடன் பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி!