ETV Bharat / state

திருச்செந்தூர் அருகே பழிக்கு பழியாக நடந்த கொலை..! 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு! - தூத்துக்குடி கொலை செய்திகள்

Revenge killing: திருச்செந்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரை 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு பழி வாங்குவதற்காக கார் ஏற்றி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

police are looking for a gang of 5 people who killed a biker by car near Thiruchendur
திருச்செந்தூர் அருகே பைக்கில் சென்றவரை கார் ஏற்றி கொலை செய்த கும்பல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 2:56 PM IST

திருச்செந்தூர் அருகே பைக்கில் சென்றவரை கார் ஏற்றி கொலை செய்த கும்பல்

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரத்தை சேர்ந்தவர் வேம்படிதுரை (40). இவர் சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர் உறவினர் இறப்பிற்கு சொந்த ஊரான வன்னிமாநகரத்திற்கு நேற்று (நவ.05) வந்துள்ளார். இறந்த உறவினர் உடல் அடக்கம் முடிந்த பிறகு வன்னிமாநகரம் வள்ளிவிளை சாலையில் உள்ள தோட்டத்தில் குளித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது ஏதிரே காரில் வந்த மர்ம நபர்கள் வேம்படிதுரை இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளனர்.

இதில் தூக்கி வீசப்பட்ட வேம்படிதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்திற்கு பயன்படுத்திய கார சாலையோரம் மண்ணின் புதையுண்டு சிக்கிக்கொண்டதால் மர்மநபர்கள் காரை எடுக்க முடியாமல் அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வேம்படிதுரை உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 7 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக வேபடிதுரை கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

2016-ஆம் ஆண்டு வன்னிமாநகரத்தை சேர்ந்த சிவகுரு (எ) சிவலட்சம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வேம்படிதுரை கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சிவகுரு (எ) சிவலட்சமின் சகோதரர்கள், உறவினர்கள் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் வேம்படிதுரை ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது.

7 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கேரளா குண்டு வெடிப்பு வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கேரள நீதிமன்றம் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.