தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேவுள்ள கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் 4 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு எதிராக செயல்படும் எடப்பாடி தலைமையிலான தமிழ்நாடு அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் அய்யாதுரை, மாற்றுத்திறனாளி நல சங்கம் மாநில குழு உறுப்பினர் சாலமன் ராஜ் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!