ETV Bharat / state

சரள்மண் கொள்ளையர்களை கண்டித்து வித்தியாசமான முறையில் கோரிக்கை மனு!

தூத்துக்குடி: ரயில்வே பணிக்காக கோவில்பட்டி பகுதியில் சரள்மண் அள்ளப்படுவது தடுக்க கோரி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணைதலைவர் அய்யாலுச்சாமி வித்தியாசமான முறையில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

ROBBERS
author img

By

Published : Aug 10, 2019, 1:50 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் கோவில்பட்டி முதல் மீளவிட்டான் வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணிகளுக்கு சரள்மண் தேவைப்படுகிறது. இதற்காக கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள கண்மாய்களில் உரிய அனுமதி இல்லமால் இரவு-பகல் என்று பாராமல் தொடர்ச்சியாக சரள் மண் அள்ளிப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து விவசாய பயன்பாட்டிற்காக விவசாயிகள் கண்மாய்களில் மண் அள்ளினால் அவர்களுக்கு, அரசு அலுவலர்கள் 50ஆயிரம் முதல் 1லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். ஆனால் இரவு-பகலாக சரள் மண் கொள்ளைபடிப்பவர்கள் மீது அரசு அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுப்படுவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணை தலைவர் அய்யாலுச்சாமி தெரிவித்தார்.

GRAVEL MUD  ROBBERS  PETITION  தூத்துக்குடி  கொள்ளையர்கள்
கோட்டாசியர் உதவியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கும் அய்யாலுச்சாமி

மேலும் சரள் மண் கொள்ளை போவதை தடுக்கவும், அதற்கு துணையாக செயல்படும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை அடங்கிய மனுவினை தேங்காய், பூ, பழம், ஊதுபத்தி, கற்பூரம் என பூஜைப்பொருள்களை தாம்பூலத்தில் வைத்து கோஷமிட்டு கொண்டே கோவில்பட்டி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் அளித்தார்.இதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Intro:கண்மாய்களில் சரள் மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு அளித்த காங்கிரஸ் நிர்வாகி
Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முதல் மீளவிட்டான் வரை 2வது ரெயில்வே பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக தேவைப்படும் சரள் மண்ணிற்காக சிலர் கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தர் தாலூகா பகுதிகளில் உள்ள கண்மாய்களில் விவசாயத்திற்கு என்ற பெயரில் உரிய அனுமதி இல்லமால் தொடர்ச்சியாக சரள் மண் அள்ளி வருவதாகவும், கயத்தார் தாலூகா மும்மலைபட்டி, ஓட்டப்பிடாரம் தாலூகா பரிவல்லிகோட்டை பகுதியில் இரவு பகலாக மண் அள்ளப்பட்டு வருவதாகவும், விவசாய பயன்பாட்டிற்காக விவசாயிகள் கண்மாய்களில் மண் எடுத்தால் 50ஆயிரம் முதல் 1லட்சம் வரை அபராதம் விதிக்கும் அதிகாரிகள், ஆனால் இரவு பகலாக சரள் மண் கொள்ளையடிப்பவர்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சரள் மண் கொள்ளை போவதை தடுக்க வேண்டும், கொள்ளையடிப்பவர்களுக்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணை தலைவரும், வழக்கறிஞருமான அய்யாலுச்சாமி, தனது கோரிக்கை அடங்கிய மனுவினை தேங்காய், பூ,பழம், பத்தி, சூடம் என பூஜைபொருள்களுடன் தாம்பூலத்தில் வைத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தனது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு அய்யலுசாமி கோரிக்கை மனுவினை கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் சூரிய கலாவிடம் அளித்தார். இதன் பிறகும் நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக அய்யலுச்சாமி தெரிவித்துள்ளார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொது செயலாளர் முத்து உடனிருந்தார்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.