தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையிலுள்ள சங்கரன்கோவில் செல்லும் சாலையில் ஹரி பாலகிருஷ்ணன் என்பவர் இறைச்சிக்கடை நடத்திவருகிறார். நேற்று வழக்கம்போல் கடையைத் திறந்து வியாபாரம் செய்துகொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று திடீரென்று இறைச்சிக் கடைக்குள் புகுந்து கடை உரிமையாளர் மீது மோதியது.
இந்த விபத்தில், கடையிலிருந்த ஹரி பாலகிருஷ்ணன் படுகாயமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கழுகுமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில், கார் ஓட்டிவந்தவர் கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டைச் சேர்ந்த செல்லையா என்பதும் அவர் சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றுவரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: அறுந்து கிடந்த மின் கம்பியை வெறுங்கையால் தொட்ட மூதாட்டி பரிதாப பலி!