ETV Bharat / state

’தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிமுக அரசை மக்கள் நம்பத் தயாராக இல்லை’ - அதிமுக அரசை மக்கள் நம்ப தயாராகயில்லை

தூத்துக்குடி: முந்தைய தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிமுக அரசை, மீண்டும் நம்ப மக்கள் தயாராக இல்லை என மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்பி
கனிமொழி எம்பி
author img

By

Published : Mar 17, 2021, 2:02 PM IST

Updated : Mar 17, 2021, 2:08 PM IST

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் எம்எல்ஏவுமான கீதா ஜீவன், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் திமுக மாநில மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி, காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று, தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமையும். தூத்துக்குடியில் திமுக கூட்டணிக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கீதாஜீவன் மக்கள் கூப்பிட்ட குரலுக்கு பணி செய்து வருபவர்.

எந்நேரத்திலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அவர் பணியாற்றியுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனர். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிமுக அரசை மீண்டும் மக்கள் நம்பத் தயாராகயில்லை. கரோனா காலகட்டத்தில் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட முடியாத அரசு அதிமுக அரசு.

ஊரடங்கு காலக்கட்டத்தில் அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மாணவ, மாணவிகளுக்கு செல்போன் வழங்கி இருந்தால்கூட அவர்களுக்கு உபயோகப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு அதிமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றித் தந்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த எம்பி கனிமொழி

தற்போது திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் அவர் நிறைவேற்றித் தருவார். குறிப்பாக மக்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவார்" எனப் பேசினார்.

இதையும் படிங்க:நடைமுறையில் உள்ள திட்டங்களைக்கூட அறியாமல் தேர்தல் அறிக்கை வெளியிடும் முதலமைச்சர்

Last Updated : Mar 17, 2021, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.