ETV Bharat / state

Part time job Cheating: பார்ட் டைம் வேலை என டெலிகிராமில் மோசடி.. ரூ.45 லட்சம் பறிகொடுத்த அவலம்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?

தூத்துக்குடியில் டெலிகிராம் ஆப் மூலம் பார்ட் டைம் வேலை என மெசேஜ் அனுப்பி, அதன் மூலம் 45 லட்சம் ரூபாய்க்கும் மேலாக பண மோசடி செய்த இளைஞரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

டெலிகிராமில் ரூ.45 லட்சத்தை இழந்த தூத்துக்குடி நபர் - பலே மோசடியில் ஈடுபட்ட நெல்லை இளைஞர்

author img

By

Published : May 25, 2023, 12:37 PM IST

தூத்துக்குடி: மில்லர்புரம் சின்னமணி நகரில் மாக்கன் மகன் தங்கதுரை (52) என்பவர் வசித்து வருகிறார். இவர், தனது மொபைலில் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தியபோது, அதில் ‘Part Time Job தேவையா?’ என்ற விளம்பரம் Aashna (@Aashna_2mi) என்ற ஐடியில் இருந்து வந்துள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த தங்கதுரை, அந்த விளம்பரத்தை அனுப்பிய நபரிடம் பேசி உள்ளார்.

அப்போது அவர்கள் FROSCH Travel Management Company என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், தங்களது நிறுவனம் உலகம் முழுவதும் பல இடங்களில் செயல்பட்டு வருதாகவும், கரோனா காலத்தில் தங்களுடைய கம்பெனி வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே அதனை மேம்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட Star Ratings கொடுப்பதன் மூலம் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும் கூறி உள்ளனர்.

அது மட்டுமல்லாமல், அவ்வாறு ஸ்டார் ரேட்டிங்ஸ் கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் தங்கதுரையிடம் கூறி உள்ளனர். இதனால் ரேட்டிங் கொடுத்த தங்கதுரைக்கு முதலில் ஆயிரத்து 100 ரூபாய் மற்றும் ஆயிரத்து 500 ரூபாய் லாபமும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், அதிக கமிஷன் வேண்டுமென்றால் பணத்தை முதலீடு செய்து, தாங்கள் கூறும் பணிகளை செய்யும்படி தங்கதுரையிடம் கூறி உள்ளனர்.

இதனால், அவர்கள் கூறிய வளைதளங்களில் பணத்தை முதலீடு செய்து, பல்வேறு பணிகளுக்கு பல தவணைகளாக மொத்தம் 45 லட்சத்து 91 ஆயிரத்து 54 ரூபாய் பணத்தை தங்கதுரை அளித்துள்ளார். இவ்வாறு 45 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்திய பிறகே, தான் மோசடி செய்யப்பட்டதை தங்கதுரை உணர்ந்துள்ளார்.

எனவே, இது குறித்து தேசிய சைபர் கிரைம் இணைய தளத்தில் (NCRP) தங்கதுரை புகார் பதிவு செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில், உதவி ஆய்வாளர் சுதாகரன் மற்றும் காவல் துறையினர் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதன் பேரில், தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்ட தனிப்படை காவல் துறையினர், தங்கதுரையிடம் பணம் மோசடி செய்த நபரை கண்டறிந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மானூர் குப்பனாபுரத்தைச் சேர்ந்த கோவில்பிள்ளை என்பவரது மகன் எலியாஸ் பிரேம் குமார் (31) என்பவர்தான் இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, நேற்றைய முன்தினம் (மே 23) எலியாஸின் வீட்டின் முன்பு வைத்து அவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த தலா ஒரு லேப்டாப், செல்போன், 9 சிம் கார்டுகள், 61 ஏடிஎம் கார்டுகள் மற்றும் பல்வேறு நிறுவன பெயர்களில் 12 போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதேநேரம், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4இல் ஆஜர்படுத்தப்பட்ட எலியாஸ் பிரேம் குமார், தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், கைது செய்யப்பட்ட எலியாஸ், பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் வங்கிகளில் சுமார் 21 வங்கி கணக்குகளை மோசடி செய்ய பயன்படுத்தி உள்ளதும், அந்த வங்கி கணக்குகளில் சுமார் 25 கோடி ரூபாய்க்கு பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், இது குறித்து தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்து மோசடியில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை காவல் துறையினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.

மேலும் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கூறுகையில், “இது போன்று பல்வேறு Like and Review Scam சைபர் குற்றங்கள் டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு, அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு பல புகார்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவாகி உள்ளது.

இதனால் Like and Review Scam சம்பந்தமாக உங்களை (பொதுமக்கள்) முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு யூடியூப் ரிவியூ, மூவி ரிவியூ மற்றும் லொகேஷன் ரிவியூ செய்வதற்கு பணம் தருவதாகக் கூறினால், அவர்களை நம்பி பணத்தை முதலீடு செய்து மோசடி செய்பவர்களிடம் ஏமாற வேண்டாம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Cyber Crime: இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம்.. எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.