தூத்துக்குடி: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் (Pongal festival) நெருங்கும் நிலையில், அனைவரும் பொங்கலைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் நாளான்று, வீடுகளில் பொங்கலிட்டு மஞ்சள் குலை, பனங்கிழங்கு ஆகியவற்றை சூரியனுக்குப் படைத்து வழிபடுவது வழக்கம்.
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து, பெரும்பாலான மாவட்டங்களில் மானாவாரி விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. பயிறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவற்றைப் பயிரிட்டுள்ளனர்.
தற்போது கதிர் பிடித்து அறுவடைக்குத் தயாராகி வருகிறது. தமிழர் திருநாள் தைப்பொங்கல் மற்றும் அதன் மறுநாள் மாட்டுப்பொங்கலன்று நிலத்தில் பாடுபட்ட கால் நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
உடன்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி, வெங்கடாசலபுரம், கருப்பூர், அயன்வடமலாபுரம், வேடப்பட்டி, குளத்தூர், பெரியசாமிபுரம், பனையடிப்பட்டி ஆகிய கிராமங்களில் லட்சக்கணக்கான பனைமரங்கள் உள்ளன. இதனை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.
இதன் பதநீர் காலம் மாசி மாதம் முதல் ஆடிமாதம் வரையாகும். இதன் பின், நுங்கு பழமாகிறது. உதிர்ந்த பனம்பழம் பனை விதைகளை நிலத்தின் அடியில் புதைத்து மண்ணால் மூடிவிடுவர். மழைக்காலத்தில் முளைத்து கிழங்காக உருவெடுக்கும். தைப்பொங்கலுக்கு பாரம்பரிய உணவுடன் பனங்கிழங்கு இடம்பெறுகிறது.
வரும் பொங்கலுக்கு விற்பனை செய்ய பனங்கிழங்கு தயாராகி வருகிறது. கடந்த வருடம் 25 கிழங்கு கொண்ட ஒரு கட்டு ரூபாய் 100-க்கு என விற்பனையானது. இங்கிருந்து அனைத்து நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக, இவை உடலுக்கு வலு சேர்ப்பதோடு, மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. இவற்றை வேகவைத்து சிறுசிறு துண்டுகளாக்கி நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பில் குறையா? உடனே கால் பண்ணுங்க - அரியலூர் கலெக்டர்