ETV Bharat / state

நெய்தல் நிலத்தை நெகிழ வைத்த ஓவியங்கள்; அசத்திய திருநங்கை ஓவியர்கள் - திருநங்கை ஓவியர்கள்

நெய்தல் நில மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பது, உப்பள தொழிலாளர்கள் வாழ்வியல் குறித்த ஓவியங்கள், முத்து போல் சிரிக்கும் குழந்தைகளின் ஓவியங்கள் என ரசிக்க வைக்கும் வகையில் சுவர் ஓவியங்கள் வரைந்திருக்கும் ஓவிய திருங்கைகள் குறித்த தொகுப்பு.

நெய்தல் நிலத்தை நெகிழ வைத்த ஓவியங்கள்; அசத்திய திருநங்கை ஓவியர்கள்

author img

By

Published : Jul 14, 2022, 11:35 AM IST

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி, தருவைக்குளம் ரோடு, கோமஸ்புரத்தில் ராஜிவ் காந்தி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்பு சுவற்றில் நெய்தல் கலை விழாவை பறைசாற்றும் வகையில் அழகிய ஓவியங்கள் வரைய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாடு செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகள் ஒன்றாக இணைந்து நடத்தி வரும் அரவாணி ஆர்ட் புராஜெக்ட் அமைப்பினரிடம் ஓவியம் வரைய கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த அமைப்பில் உள்ள ஸ்மிதா அவிமுக்தா, காஞ்சனா, வர்ஷா பிரதீப், நந்தினி, பூஜா, புதேஷ், ஆகிய 7 பேர் கொண்ட குழுவினர் ஓவியம் வரையும் பணிகளைக் கடந்த மாதம் 30ஆம் தேதியன்று தொடங்கினர்.

இப்பணிகளை நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 7அன்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கடந்த 13 நாட்களாக நடைபெற்ற இப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

இக்குடியிருப்பில் உள்ள ஐந்து கட்டடம் கொண்ட 32 அடி உயர சுவர்களில் அழகிய ஓவியங்களை திருநங்கைகள் மக்களைக் கவரும் வண்ணத்தில் தீட்டி வியப்படைய வைத்துள்ளனர். இச்சுவற்றில் நெய்தல் நிலம் குறித்தான மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பது, உப்பளத்தொழிலாளர்கள் வாழ்வியல் குறித்த ஓவியங்கள், நடனக்கலைகளை ஊக்குவிக்கும் விதமாக, முத்து போல் சிரிக்கும் குழந்தைகளின் ஓவியங்கள் என அழகிய ஓவியங்களைத் தீட்டி கவர வைத்துள்ளனர்.

வெளிநாடுகளிலும், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களிலும் பல்வேறு விதமான ஓவியங்கள் வரைந்து வந்துள்ள இக்குழுவானது, தமிழ்நாட்டில் 150 பள்ளிகளுக்கு மேல் படிக்கும் மாணவர்களின் கருத்தை தூண்டும் வகையில் முக்கியத்துவ ஓவியங்கள் வரைந்துள்ளனர்.

நெய்தல் நிலத்தை நெகிழ வைத்த ஓவியங்கள்; அசத்திய திருநங்கை ஓவியர்கள்

இது குறித்து திருநங்கை ஓவியர் ஸ்மிதா அவிமுக்தா கூறுகையில், 'தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அரவாணி ஆர்ட் புராஜெக்ட் அமைப்பு மூலம் ஓவியம் வரைந்து வருகிறோம். தற்போது முதன்முறையாக கிராமப்புறத்தில் உள்ள பகுதிகளில் ஓவியம் வரைந்துள்ளது எங்களுக்கு இனிய அனுபவமாக உள்ளது. திருநங்கை என்றாலே வேறு ஒரு பார்வையைக் கொண்ட கண்ணோட்டம் உள்ளது.

திருநங்கைகளும் சமூகத்தில் நன்முறையில் வாழ முடியும் என்று ஊக்குவிக்கும் முற்சியே அரவாணி ஆர்ட் புராஜெக்ட்டின் முக்கிய அம்சமாகும்' எனக் கூறினார்.

மேலும், இந்த குடிசை மாற்று வாரிய சுவர்களில் வரையப்பட்டுள்ள நெய்தல் நிலத்தின் வாழ்வியலை தெரிவிக்கும் இந்த அழகிய ஓவியங்களை சாலையோரம் செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பார்த்து, வியந்து, ரசித்து செல்கின்றனர்.

இதையும் படிங்க: ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி - மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.