ETV Bharat / state

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 6.34 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் அனுப்பி வைப்பு - Thoothukudi latest news

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 6.34 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் அனுப்பி வைப்பு
ஆக்ஸிஜன் அனுப்பி வைப்பு
author img

By

Published : May 19, 2021, 6:42 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 13ஆம் தேதி முதலாவதாக 4.82 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு டேங்கர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆக்ஸிஜன் உற்பத்தி பிரிவில் குளிர்விக்கும் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆக்ஸிஜன் உற்பத்திப் பணி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறை சீர்செய்யும் முயற்சியில் ஆலையின் தொழில்நுட்பக் குழு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுநர்கள் குழு ஈடுபட்டது.

தற்போது, ஆக்ஸிஜன் உற்பத்தி பிரிவில் குளிர்விக்கும் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆக்ஸிஜன் அனுப்பி வைப்பு

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 6.34 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட லாரியை ஸ்டெர்லைட் ஆலை முதன்மைச் செயலர் பங்கஜ் குமார் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

ஆக்ஸிஜன் லாரிக்கு பாதுகாப்பாக ரோந்து வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் சென்றனர்.

இதையும் படிங்க: மீண்டும் ஆள் பற்றாக்குறை, நிதி நெருக்கடியால் திணறும் தொழில் நிறுவனங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.