ETV Bharat / state

மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் தொடங்கிய ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி!

author img

By

Published : May 17, 2021, 6:40 PM IST

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் குளிர்விக்கும் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யபட்டு மீண்டும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி தொடங்கியது.

மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் தொடங்கியது ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 13ஆம் தேதி முதலாவதாக 4.82 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு டேங்கர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆக்ஸிஜன் உற்பத்திப் பிரிவில் குளிர்விக்கும் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆக்ஸிஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறை சீர் செய்யும் முயற்சியில் ஆலையின் குழு ஈடுபட்டு வந்தது. மேலும் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுநர் குழு நேற்று முன்தினம் (மே.15) ஆலைக்கு வந்தது.

அவர்களுடன் ஆலையின் தொழில்நுட்பக் குழுவும் இணைந்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தற்போது, ஸ்டெர்லைட் ஆலையில் குளிர்விக்கும் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யபட்டு, மீண்டும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி தொடங்கியது.

இதையும் படிங்க: கோவையில் ஆக்ஸிஜன் பஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.