ETV Bharat / state

ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக கோட்டை- அமைச்சர் காமராஜ்

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அதிமுக கோட்டை என்றும், நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் காமராஜ்
author img

By

Published : Apr 28, 2019, 6:58 PM IST

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன், சேவூர் ராமசந்திரன், ராஜலட்சுமி, கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தை முடித்துக் கொண்டு அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் காமராஜ் கூறியதாவது,

ஒட்டபிடாரம் தொகுதி அதிமுக கோட்டை

தமிழ்நாட்டில் உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த நான்கு தொகுதிகளிலும் அதிமுக கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். அதேபோல் ஓட்டபிடாரம் தொகுதி அதிமுக கோட்டை. இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுகதான் இங்கு அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக ஓட்டபிடாரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகன் சுமார் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மேலும் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டு கொடுக்காமல் மத்திய அரசோடு நாங்கள் இணைந்து ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் தூத்துக்குடி புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் காமராஜ், கே.டி. ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன், சேவூர் ராமச்சந்திரன், ராஜலட்சுமி, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்தனம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை அடுத்து, உணவு துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது,
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டபிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு
இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த நான்கு சட்டமன்ற தொகுதி இடை தேர்தல்களிலும் அதிமுக கட்சி வேட்பாளர்கள் மிக பெரிய வெற்றி பெறுவார்கள். ஓட்டபிடாரம் தொகுதி அதிமுக கோட்டை. இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக தான் அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக ஒருமுறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

ஓட்டபிடாரம் தொகுதி தேர்தலில்
அதிமுகவாவோ, அல்லது அதிமுக ஆதரிக்கும் கட்சிகளோ தான் வெற்றி பெற்றுள்ளது. ஓட்டபிடாரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மோகன் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

தமிழகத்தின் உரிமைகளை விட்டு கொடுக்காமல் மத்திய அரசோடு இணைந்து ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறோம். மறைந்த முதல் அமைச்சர்
ஜெயலலிதா செயல்படுத்திய  திட்டங்களை அப்படியே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசில் செயல்படுத்தி வருகிறோம். அது எங்களுக்கு வெற்றியை தேடி தரும். ஒரு சார்பு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிகாரிகளை மாற்றும் செயல் என்பது தேர்தல் கமிஷன் நடவடிக்கை அதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.
என்றைக்குமே  துரோகம் செய்தவர்கள் வென்றதாக வரலாறு கிடையாது.
இந்த தேர்தலில் எதிரிகளும், துரோகிகளும் வெற்றி பெற முடியாது.

வரம்பு மீறியும், கட்சி விதி முறைகள் மீறி செயல்படுபவர்கள்  மீது சபாநாயகர், கொறடா  நடவடிக்கை எடுப்பார்கள். அதன்பேரில் கட்சி விதிமுறை மீறி செயல்பட்ட 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் இதுகுறித்து தகுந்த விளக்கம் அளித்துள்ளார். எனவே,
இதில் ஏதும் சொல்வதற்கில்லை என்றார்.

Visual in LU app.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.