தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் ஃபென்னிக்ஸ். அவர்கள் இருவரும் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டனர். அதையடுத்து அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 25) கோவில்பட்டி கிளைச்சிறையிலிருந்து மேலும் ஒரு விசாரணைக் கைதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரையும் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றிய ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் இருவரும் விசாரித்து வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: சிறையில் தந்தை-மகன் உயிரிழப்பு: கொலை வழக்குப் பதிவுசெய்ய டிடிவி தினகரன் வலியுறுத்தல்!