ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் பதவிப் போட்டி: ஒட்டப்பிடாரத்தில் ஒருவர் வெட்டிக்கொலை 3 பேர் படுகாயம்!

தூத்துக்குடி: உள்ளாட்சித் தேர்தல் பதவிப் போட்டியில் ஒட்டப்பிடாரத்தில் இரு தரப்பினருக்கிடையே நடந்த மோதலில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டப்பிடாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் பதவிப்போட்டி  உள்ளாட்சித் தேர்தல் தகராறு  ஒட்டப்பிடாரத்தில் அரிவாள் வெட்டு  One man killed in Thoothukudi who participated in local body elections  ottapidaram local body issue
உள்ளாட்சி தேர்தல் பதவிப் போட்டி: ஒட்டப்பிடாரத்தில் ஒருவர் வெட்டிக்கொலை 3 பேர் படுகாயம்
author img

By

Published : Dec 30, 2019, 8:50 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், கயத்தாறு, புதூர், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி அமைதியாக நடைபெற்று வந்தது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவலர்கள் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், ஒட்டப்பிடாரம் பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் திமுக பிரமுகர் இளையராஜா தரப்பினருக்கும் ஒட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாசாணசாமி மனைவி லதா தரப்பினருக்கும் இடையை இன்று நண்பகல் வாக்கில் தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இச்சம்பவத்தில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட லதா என்பவரின் கணவர் உட்பட நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இந்த அசம்பாவிதத்தில் இளையராஜா தரப்பைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பச்சை பெருமாள், ஜெயமுருகன் மற்றும் மற்றொருவர் பலத்த காயமடைந்ததனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் பதவிப் போட்டி: ஒட்டப்பிடாரத்தில் ஒருவர் வெட்டிக்கொலை 3 பேர் படுகாயம்

காவலர்களின் முதற்கட்ட விசாரணையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காவலர்கள் தனிப்படை அமைத்து மோதலில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வாக்குச்சாவடியில் மின்தடை - டார்ச் லைட்டுடன் வந்து வாக்களித்த தங்கதமிழ்செல்வன்!

Intro:ஒட்டப்பிடாரத்தில் உள்ளாட்சி தேர்தல் பதவிப்போட்டியில் ஒருவர் வெட்டிக்கொலை - 3 பேருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு

Body:ஒட்டப்பிடாரத்தில் உள்ளாட்சி தேர்தல் பதவிப்போட்டியில் ஒருவர் வெட்டிக்கொலை - 3 பேருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கயத்தாறு, புதூர், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்காண இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி அமைதியாக நடைபெற்று வந்தது. இன்று காலை முதல் அமைதியாக நடைபெற்று வந்த தேர்தலில் மதியத்துக்கு மேல், ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் திமுக பிரமுகர் இளையராஜா மற்றும் ஒட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மாசானசாமி என்பவரின் மனைவி லதா ஆகியோரின் தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக அப்பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேட்டூர் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட பதவிப்போட்டி காரணமாக இளையராஜா தரப்புக்கும், மாசாணசாமி தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட லதா என்பவரின் கணவர் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த அசம்பாவிதத்தில் இளையராஜா தரப்பை சேர்ந்த மாரியப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே வெட்டுகாயங்களுடன் பரிதாபமாக பலியானார். தொடர்ந்து பச்சை பெருமாள், ஜெயமுருகன் மற்றும் மற்றொருவருக்கும் பலத்த வெட்டுக் காயங்கள் விழுந்தது. இதுபற்றி தகவலறிந்த ஒட்டப்பிடாரம் போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்கள் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது மோதலில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு தனிப்படையினரையும் அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.