ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்- 979 நபர்களிடம் விசாரணை - Thoothukudi latest news

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இதுவரை 979 நபர்களிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.

979 நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை
979 நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை
author img

By

Published : Oct 27, 2021, 10:06 AM IST

Updated : Oct 27, 2021, 10:52 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு, தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே 30 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, 962 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 31 ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது.

31 பேருக்கு சம்மன்

இந்த முகாமில், துப்பாக்கிச் சூடு நடந்த அன்றைய தினம் பணியிலிருந்த மாசு கட்டுப்பாட்டு அலுவலர்கள், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்த வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 31 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தனர்.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி அருணா ஜெகதீசன்

இது குறித்து வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "31 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டதில் 17 பேர் விசாரணைக்காக ஆணையத்தின் முன்நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

10 நாள் விசாரணை

இதுவரை மொத்தம் 1360 பேருக்கு அழைப்பாணை கொடுக்கப்பட்டு, 979 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 1223 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

ஒருநபர்‌ ஆணையத்தின் 32ஆவது கட்ட அமர்வு நவம்பர் 16 முதல் தொடங்கி 10 நாள் நடக்கவுள்ளது. இதில் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளைப் பரிசோதனை செய்த தடயவியல் அலுவலர்கள், துப்பாக்கியால் சுட்ட காவலர்கள் ஆகியோர் விசாரிக்குள்ளோம்.

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், தென் மண்டல காவல்துறை துணைத் தலைவர் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்படுவர். எனவே, அரசு நிர்ணயித்துள்ள கால அவகாசத்துக்குள் ஒருநபர் ஆணையத்தின் விசாரணையை முடிக்கத் திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

இதையும் படிங்க: ’பெண் குழந்தைகளுக்கு சுயமாக வாழக் கற்றுகொடுப்பதே பெற்றோரின் கடமை’ - கனிமொழி எம்பி

Last Updated : Oct 27, 2021, 10:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.