ETV Bharat / state

மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதியதில் 1 நபர் பலி; 2 பேர் பலத்த காயம்!

தூத்துக்குடியில் மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதியதில் 1 நபர் பலி; 2 பேர் பலத்த காயம்!
மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதியதில் 1 நபர் பலி; 2 பேர் பலத்த காயம்!
author img

By

Published : Jan 19, 2023, 11:04 PM IST

மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதியதில் 1 நபர் பலி; 2 பேர் பலத்த காயம்!

தூத்துக்குடி: திரேஸ்புரம் பகுதியில் உள்ள நாட்டுப்படகில் கடந்த 17 ஆம் தேதி தூத்துக்குடி, திரேஸ்புரம் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயபால், அண்டோ, மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஷேக் முகமது ஆகிய 3 பேர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, படகில் மீன் பிடித்து விட்டு 18 ஆம் தேதி காலையில் கரைக்குத் திரும்பும் வேளையில் தூத்துக்குடியில் இருந்து 36 நாட்டிக்கல் மைல் தொலைவில் படகு சென்று கொண்டிருந்தபோது, திடீரென கண்டெய்னர் ஏற்றி வந்த கப்பல் நாட்டுப்படகு மீது மோதியதில் நாட்டுப்படகில் இருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டு நாட்டுப்படகு உடைந்து கடலில் மூழ்கியது.

நாட்டுப் படகின் உடைந்த பாகங்களைப் பிடித்தவாறு கடலில் பல மணி நேரம் தத்தளித்த மீனவர்களைக் கொம்பு துறையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ரிச்சர்டு என்பவரின் நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் தத்தளிப்பதைப் பார்த்து இன்று(ஜன.19) அதிகாலை 5 மணியளவில் அவர்களைப் பத்திரமாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.

இதில் பலத்த காயம் அடைந்த ஷேக் என்பவர் நடுக்கடலில் இன்று அதிகாலை 3 மணி வரை கடலில் தத்தளித்த நிலையில், அவ்வழியாக எந்த படகும் வராததை தொடர்ந்து அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அவரின் உடலை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், 2 பேர் படுகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நாட்டுபடகு மீனவர் சங்க தலைவர் கயாஸ் கூறுகையில், தூத்துக்குடியில், 25 கிலோமீட்டர் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கப்பல் அவ்வழியாக வந்துள்ளது. அந்த கப்பலை பார்த்தவுடன் மூன்று பேரும் அபாயகுரல் எழுப்பியுள்ளனர்.

ஆனால் அந்த கப்பலில் உள்ளவர்கள் எதையுமே கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. அந்த ரெடாடில் கடலில் என்ன துரும்பு கிடந்தாலும் தெரியும், ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. இதனால், மூன்று பேரும் கடலில் தத்தளித்திருக்கிறார்கள். இதில், ஷேக் என்பவர் உயிரிழந்துள்ளார். ஒரு கப்பல் வெளியே போகும்போதும், வரும்போதும் 40 கடல் மைல் தூரம் சென்று தான் இடது பக்கம், வலது பக்கம் திரும்ப வேண்டும். இது தான் சட்டம் சொல்கிறது.ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.

ஆகவே, அந்த கப்பலை உடனடியாக சிறை பிடிக்க வேண்டும். இது வன்மையாக கண்டிக்க வேண்டியது, இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது. மேலும், இறந்தவர்களுக்கும், காயமுற்றோர்களுக்கும் அரசு உதவிகள் செய்ய வேண்டும். மேலும், அரசு இதில் தனிக்கவனம் செலுத்தி அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:"காவல் நிலையத்திற்குச் சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை உருவாக வேண்டும்"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.