ETV Bharat / state

அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் தூத்துக்குடி அமைச்சராக இருக்கலாம்… சசிகலா புஷ்பா பரபரப்பு பேச்சு!!

author img

By

Published : Jul 18, 2023, 8:19 PM IST

அமலாக்கத்துறை சோதனையில், மூன்றாம் அமைச்சராக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமைச்சர்களாக கூட இருக்கலாம், எம்.பி.யாக கூட இருக்கலாம் என பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சசிகலா புஷ்பா பரபரப்பு பேச்சு

தூத்துக்குடி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சித்த கர்நாடகா காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கூறுகையில், ''தமிழ்நாட்டில் மேகதாது அணை கட்டப்பட இருப்பது கடைக்கோடி மக்களுக்கு திமுக துரோகம் செய்கிறது. வாக்கு செலுத்திய பொது மக்களுக்கு திமுக துரோகம் செய்கிறார்கள். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதற்கு முன்னர் எத்தனை தடவை தண்ணீர் பிரச்னை வந்தது.

அப்போது தமிழர்களை கர்நாடகாவினர் அடித்தார்கள், உதைத்தார்கள். மாநிலத்திற்கு வாழ்வாதாரமே தண்ணீர் தான். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அங்கு செல்வது வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்வதாகும். ஆகவே மேகதாது அணையை நீங்கள் கட்டக்கூடாது. மேகதாது அணை விஷயத்தில் நாங்கள் தீவிரமாக இருக்கின்றோம் என்று முதலமைச்சர் அங்கு கூற வேண்டும். ஆனால் அவர் கூற மாட்டார்.

மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி தான், இதற்கு முன்பு பாஜக கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டிற்கு 117 டிஎம்சி தண்ணீர் வரவழைத்தது. ஆகவே, முதலமைச்சர் அங்கே போய் எதிர்ப்பை காட்டி விட்டு வர வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாகும்.

திமுகவின் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம். ஏனென்றால் கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் காலம் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கக் கூடிய திராவிட கட்சிகள் இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியில் ஒரு தலை சிறந்த பிரதமர் உலகமே கொண்டாடக்கூடிய நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு உள்ளே வரும் போது ஒரு தவறான கட்சி போல சித்தரித்து "கோ பேக் மோடி" என்று சொல்லி மக்களுடைய மனதில் நஞ்சை விதைத்தீர்கள்.

ஆனால், இன்றைக்கு அண்ணாமலை என்று தலைவர் வருவான் என்று அப்போது உங்களுக்கு தெரியாது. மோடிஜியுடைய புகழ் என்ன என்பது பொதுமக்களுக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்கு மாநிலத் தலைவர் திமுக ஃபைல்ஸ் என்ற ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அமலாக்கத்துறை சோதனையில், மூன்றாம் அமைச்சராக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமைச்சர்களாக கூட இருக்கலாம். எம்.பி.யாக கூட இருக்கலாம். மேலும், பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சத்துணவுத் துறையில் ஊழல் நடக்கவில்லையா, எந்த கட்சியாக இருந்தாலும் சரி கூட்டணி கட்சியாக இருந்தாலும் சரி நடவடிக்கை எடுத்து கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று சொன்னபடி செயல்பட்டு கொண்டிருக்கக் கூடிய அரசு மோடி அரசு.

அதற்கு முத்தாய்ப்பாய் தமிழ்நாட்டில் அண்ணாமலை சொல்லி, சொல்லி நெத்தியடி அடிக்கின்றார். திமுக காலம், காலமாக சம்பாதித்த கள்ள பணத்தை ஒழித்து வைத்தது. அதனால் அவர்கள் அங்கும், இங்கும் ஓடுகின்றார்கள். திமுகவினர் அதிகமாக வெளிநாட்டில் முதலீடு பண்ணி இருப்பதாகத் தகவல் இன்றைக்கு வெளிவந்திருக்கிறது’’ என்றார்.

அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே போன்ற தலைவர்கள் போல் தமிழ்நாட்டிலும் உருவாக வாய்ப்பு இருக்கின்றதா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ''காலம் பதில் சொல்லும்'' என்று கூறினார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்'' என்றார்.

அடுத்த டார்கெட் தூத்துக்குடி அமைச்சராக கூட இருக்கலாம் என்று சொல்கிறீர்கள். அதன் சம்மந்தமாக உங்களுக்கும் ஏதும் தகவல் வந்ததா என்ற செய்தியாளர் கேள்விக்கு, ’’எந்தெந்த தொழிலில் அதிகமாக ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்று மக்களுக்குக் கூட தெரிந்து விட்டது. யார் தவறு பண்ணினாலும், சோதனை வரத் தான் செய்யும். அவர்கள் அந்த கடமையை செய்ய வேண்டும்” எனப் பதில் கூறினார்.

இதையும் படிங்க: பாஜக நோட்டாவை விட ஓட்டு அதிகம் வாங்குகிறார்களா குறைவாக வாங்குகிறார்களா என பார்க்கலாம் - கீதாஜீவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.