தூத்துக்குடி: வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.100 கோடியில் பொருளாதார மேம்பாட்டு மண்டலம் அமைப்பது உள்பட ரூ.228 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை மத்திய கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் மேம்படுத்தப்பட்ட நிலக்கரி கிடங்கு சாலை, நூறு சதவீதம் எல்இடியாக மாற்றும் திட்டம், புதிய ஆறு மின்சார கார் சேவைகள், தகவல் தொழில்நுட்ப இணைப்பு மேம்பாடு, மின் போக்குவரத்து திட்ட மேம்பாடு, 140 கிலோ வாட் மேற் கூரை சூரிய மின் திட்டம், 140 மெட்ரிக் டன் மின்னணு எடை மேடை, கப்பல் போக்குவரத்து மென்பொருள், ஆக்சிஜன் ஆலை ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் ஆயுஷ் பிரிவு உள்ளிட்ட முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 1 மணி நேரத்தில் 100 சரக்கு பெட்டக வாகனங்களை சோதனை செய்யும் ஸ்கேனர் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி துறைமுக மேம்பாட்டு பணிகள் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் - அண்ணாதுரை