தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதுரோடு - எட்டயபுரம் சாலை சந்திப்பில் தானியங்கி சிக்னல், சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு, தானியங்கி சிக்னலையும், சிசிடிவி கேமிராக்களையும் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறியதாவது, கோவில்பட்டியில் 6 லட்சம் ரூபாய் செலவில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு, 10 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல், நகரப்பகுதி மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்துவதற்கு முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயதப்படையில் இருந்து காவல் நிலையங்களுக்கு காவலர்கள் மாற்றம் செய்யப்படவுள்ளனர். அப்போது காலியாக உள்ள இடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். கோவில்பட்டியில் வாகன எண்ணிக்கை அதிகமாகி வருவதால், அதற்கு தகுந்தாற்போல் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு காவடி தூக்கும் மாநில அரசு - டி.ஆர். பாலு கடும் தாக்கு