ETV Bharat / state

Neet exam: கல்வியை சீர்குலைத்து, கல்வி கட்டமைப்பை அழிக்க வந்ததே நீட் தேர்வு - சபாநாயகர் அப்பாவு

கல்வியை சீர்குலைத்து கல்வி கட்டமைப்பை அழிக்க வந்ததே நீட் தேர்வு என தூத்துக்குடி தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சபாநாயகர் அப்பாவு கூறினார்

சபாநாயகர் அப்பாவு
Neet exam
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 7:27 PM IST

Neet exam

தூத்துக்குடி செயின்ட் ஆன்ஸ் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து முடித்த கல்லூரி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா, செயின்ட் ஆன்ஸ் கல்லுரியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்கள்.

பின்னர் மாணவிகள் மத்தியில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ”ஒரு காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தை தவிர வேறு யாரும் கல்வி கற்க முடியாது. நிலம் வாங்க வேண்டும் என்றால் எல்லோரும் வாங்கி விட முடியாது. சனாதன தர்மத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்தியாவில் 8% இருந்தவர்களுக்கு தான் நிலம் சொந்தம், கல்வி சொந்தம், வேறு யாரும் கல்வி கற்க முடியாது. வேறு யாரும் நிலம் வாங்க முடியாது.

ஆகவே அந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1795ல் நிலம் வாங்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தனர். 1835ல் மெக்காலே பிரபு எல்லோரும் கல்வி கற்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தார். இதற்கு முன்னர் பஞ்சவர்கள் கல்வி கற்கலாம். சமஸ்கிருதத்தில் கல்வி கற்கலாம். சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் கல்வி கற்கலாம் என்றிருந்தது.

வரலாறு, பூகோளம் இது தான் பாடத்திட்டம். இதுதான் படிக்க வேண்டும் என்று சட்டமாக்கி நமக்கு எல்லாம் கல்வியை படிக்கலாம் என்று அனுமதி தந்தவர் மெக்காலே பிரபு. கள்ளக்குறிச்சியில் இப்போது கூட ஒரு குருகுலம் உள்ளது. அந்த குருகுலத்தில் அவர்கள் மட்டும் தான் கல்வி கற்க முடியும். நீங்களும், நாங்களும் கல்வி கற்க முடியாது.

எவ்வளவு கொடுமையான விஷயம், ஆனால் சனாதன தர்மம் தான் இந்த நாட்டை வளர்த்தது என்று சொல்லிக் கொள்வார்கள். மாணவர்கள் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். ஜாதியை சொல்லி நம்மை ஒதுக்கி தள்ளிவிட்டு அடிமையாக்கி நாம் எதுவும் உரிமை கோராமல் எதுவும் நமக்கு கிடையாது என்பதை உருவாக்கி அவர்களே கல்வி கற்க வேண்டும் என்று இந்த நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள்.

திமுக ஆட்சி திராவிட மாடல் ஆட்சி, திராவிட மாடல் தான் தமிழ்நாட்டை தலை நிமிர வைத்திருக்கிறது என்று சொன்னால் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் வந்த இன்றைய முதல்வர் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள். இந்தியாவில் பெண்கள் 26 சதவீதம் பேர் பட்டம் பெற்றவர்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் பட்டம் படித்தவர்கள் படித்துக் கொண்டிருக்கிறவர்கள் கணக்கிட்டு பார்த்தால் 72% பேர், இந்தியாவில் ஆண், பெண் இருபாலரும் 34 சதவீகிதம் என்றால் தமிழகத்தில் 51 சதவீகிதம் பேர், இந்தியாவில் 2வது இடத்தில் தமிழ்நாட்டில் தான் ஜிஎஸ்டி வசூல் அதிகம், இதனை பிடிக்காதவர்கள், நீட் தேர்வை கொண்டு வந்து கல்வியை சீர்குலைக்கின்றனர்.

கல்வி கட்டமைப்பை அழிக்க வந்தது தான் இந்த நீட் தேர்வு. இதனை தான் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பலர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்தியா மட்டுமல்ல, உலகத்தில் கல்வி வளர்ச்சிக்கு எதிரானது இந்த நீட் தேர்வு. 2011இல் கலைஞர் ஆட்சியில் நீட் தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தற்போது உள்ளே வந்து விட்டது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தால் அவர்கள் மத்தியில் நீட் தேர்வை ரத்து செய்ய போராடுவார்கள். இந்திய அளவில் மிக பெரிய கூட்டணியை உருவாக்கி கல்வி, எதிர்கால திட்டங்களை உருவாக்கி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்” என்றார்.

இதையும் படிங்க: வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டு சிறை... தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.