தூத்துக்குடி: கோவில்பட்டியில் 12வது தேசிய ஜூனியர் ஆண்களுக்கான ஹாக்கி போட்டிகள் மே 17 தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் 30 அணிகள் பங்கேற்றுள்ளது. 540 வீரர்களும், 50 போட்டிகளும்,8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடைபெறும்.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் எச் பிரிவில் இடம்பெற்றுள்ள டெல்லி - உத்தரகாண்ட் மோதியது.இதில் 7-2 என்ற கோல் கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்றது.இரண்டாவது ஆட்டத்தில் எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ள பஞ்சாப்- ஆந்திர பிரதேசம் அணிகள் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க:Hockey National Junior Championship: கோப்பையை வென்றது உத்தரப் பிரதேசம்!