தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பாலாஜி ராமச்சந்திரனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், "நாங்கள் யாரோ தொடங்கிய கட்சியைக் கைப்பற்றி அதன் தலைவராகி இந்தத் தேர்தல் களத்தைச் சந்திக்கவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைக்காதது எங்களுடைய கொள்கை.
நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம், அதனால்தான் தனித்து நிற்கிறோம். ஆண், பெண் சமம் என்பதால் எங்கள் கட்சியில் ஆணுக்குப் பெண் சமமான இடங்கள் சட்டப்பேரவைத் தொகுதியில் வழங்கப்பட்டுள்ளது.
துணி எடுக்கப் பல கடைகள் சென்று பல துணிகளைப் பார்க்கும் நாம் நம்மை 5 ஆண்டுகள் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை ஏன் சிந்தித்துத் தேர்ந்தெடுப்பதில்லை
இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்த நீங்கள், என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளீர்கள். இலவசங்களைக் கொடுத்து பிச்சைக்காரர்களாக வைத்துள்ளீர்கள். உழைப்பவர்களின் பையிலிருந்து காசை எடுத்து இலவசங்களைக் கொடுக்கிறார்கள்.
டீசல் சிலிண்டர் விலை உயர்வு பற்றி பிரதமர் மோடியிடம் கேட்டால் கியா கியா என்பார். பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் விலை அனைத்தும் உயர்ந்துள்ளன" என்றார்.
இதையும் படிங்க: 'உங்க பின்னாடியே வரணுமா' - கமலிடம் பெண் எழுப்பிய கேள்வி