ETV Bharat / state

சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாய், மகள் உயிரிழப்பு - திடுக்கிடும் தகவல் - கோவில்பட்டி

கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்பானம் குடித்ததால் தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில், அவர்கள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையால் கைது செய்யப்பட்ட வீரப்பெருமாள்
தற்கொலை செய்துகொண்டகற்பகம்
author img

By

Published : Oct 16, 2021, 8:30 PM IST

தூத்துக்குடி : கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் டிரைவர் இளங்கோவன். இவருடைய மனைவி கற்பகம்(34)அவரது மகள் தர்ஷினி (7) இருவரும் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் கடந்த 12 ஆம் தேதி சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டு விட்டு, குளிர்பானம் குடித்த போது திடீரென இருவரும் மயங்கி விழுந்தனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கிரேவி, குளிர்பானம் தான் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

எதற்கும் தற்கொலை தீர்வல்ல
எதற்கும் தற்கொலை தீர்வல்ல

செல்போன் ஆய்வில் நடந்தது

இந்நிலையில் கற்பகம் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்த போது, கற்பகம் வீட்டின் அருகே இருக்கும் வீரப்பெருமாள் (34) என்பவர் கற்பகத்திற்கு தன்னுடன் இருக்கும்படி அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், ஏற்கனவே இருவருக்கும் இடையே தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. அதன் பின்னர் கற்பகம், வீரப்பெருமாளுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது எடுத்த படம் மற்றும் வீடியோவை வைத்து வீரப்பெருமாள் மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது.

வீரப்பெருமாள்
காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்

தற்கொலைக்கு தூண்டியவர் கைது

தாய், மகள் இறந்த அன்று வரையில் வீரப்பெருமாள் தொடர்ச்சியாக கற்பகத்திற்கு வாட்ஸ் அப் மூலமாக மிரட்டல் விடுத்து வந்துள்ளார். தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் படம் மற்றும் வீடியோவை காண்பித்து விட்டால் அவமானம் ஏற்பட்டு விடும் என்று கருதிய கற்பகம் சாப்பாடு அல்லது குளிர்பானத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர், வீரப்பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையானார் சுதாகரன்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.