ETV Bharat / state

ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்ட தாய், மகள் மரணம்! - ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்ட தாய் - மகள் மரணம்

கோவில்பட்டியில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டா சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்தனர்.

parotta
parotta
author img

By

Published : Oct 13, 2021, 12:21 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்பன் நகரைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி கற்பகம் (33). இவர்களது மகள் தர்ஷினி (7). நேற்றிரவு (அக். 12) கற்பகம், தர்ஷினியுடன் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள தனியார் உணவகத்திற்குச் சென்று இருவரும் புரோட்டா சாப்பிட்டனர். அதன்பின் அருகே உள்ள கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்த தாயும் மகளும் திடீரென மயக்கம் அடைந்தனர். இதைப் பார்த்த உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் கற்பகத்தையும் தர்ஷினியையும் மருத்துவத்துக்காக கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

parotta
உயிரிழந்த தர்ஷினி - கற்பகம்

அங்கு அவர்கள் இருவரின் உடல்நிலையும் மோசம் அடைந்ததால் மருத்துவர்கள் முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால் பாளையங்கோட்டை செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து கற்பகம், தர்ஷினி உடல் மீண்டும் உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். இது குறித்து தகவலறிந்த கிழக்கு காவல்நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மாஸ்க் பரோட்டா 'கரோனா' தோசை - மதுரையை அசத்தும் 'டெம்பிள் சிட்டி'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.